நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி வெற்றி #TNAssembly #Liveupdates | Will Edapaadi Palanisaamy prove his majority? - LIVE updates from Tamilnadu Assembly Ballot

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (18/02/2017)

கடைசி தொடர்பு:19:17 (18/02/2017)

நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி வெற்றி #TNAssembly #Liveupdates

இரவு 7 மணி: தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் அறப்போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் தற்போது  விடுவிக்கப்பட்டனர்.

4 மணி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டற்கும், தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளதாக திமுவினர் கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் கனிமொழி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாலை 5 மணி அளவில்  மு.க.ஸ்டாலின் உட்பட  திமுக எம்.எல்.ஏ.கள் கைது செய்யப்பட்டனர்.

மதியம் 3.40: தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டது குறித்து, ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து முறையிட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டு, பனியனுடன் வெளியேற்றப்பட்டார். அதே தோற்றத்துடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிடச் சென்றார். ஆனால், ஆளுநர் மாளிகையில் திமுகவினருக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தானும் திமுகவினரும் தாக்கப்பட்டதாக முறையிட்டார். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் வலியுறுத்தினார்.

மதியம் 3.20: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி.

பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணி 122 வாக்குகள் பெற்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணி 11 வாக்குகள் மட்டுமே பெற்றது. நடுநிலை வாக்குகள் ஒன்றுகூட பதிவாகவில்லை. இதனால், முதல்வர் பழனிச்சாமி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மதியம் 2:45: எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் பேரவையில் இருந்து வெளியே வருகிறார். பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிக்க செல்கிறார் ஸ்டாலின்.

Stalin Shirt torn

மதியம் 2:30: சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் தர்ணா. அவையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் பேரவைக்கான பாதையில் அமர்ந்து தர்ணா.

மதியம் 2:15: தளி எம்.எல்.ஏ பிரகாஷ், மா. சுப்பிரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றம்.

மதியம் 2.10: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தற்போது சபாநாயகர் அறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மதியம் 2:00 சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், நந்தகுமார், சேகர் பாபு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு அவைக்கு வந்தபோது அனுமதிக்காததால் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் தர்ணா.

மதியம் 1:45 திமுக-வின் கடும் அமளியால், சட்டசபை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள், 'சட்டப்பேரவையை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்.' என கூட்டாக கோரிக்கை வைக்கின்றனர். இந்த கோரிக்கைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மதியம் 1:30 மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

மதியம் 1:20 மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. 

மதியம் 1.10: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு!. திமுக உறுப்பினர்களுக்கும், அவைக் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு. 

மதியம் 1:00: சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அணியினர், எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த அமளியில் பேரவையின் ஊழியர் பாலாஜி என்பவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை கொண்டு செல்வதற்கு, பேரவைக்கு 108 ஆம்புலன்சு வந்தது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சு மூலம், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

மதியம் 12:20: சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்கள் நாற்காலிகளை தட்டியும், பேப்பர்களை கிழித்தும் சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதில் சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் வெளியேறினார். இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை சட்டசபையில் சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதியம் 12:10: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டு, முதல் பிரிவு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதன்பிறகு, எதிர்கட்சியினர் பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக் கோரி அமளியில் ஈடுபட்டனர். திமுக-வினர், 'கண்டிப்பாக இன்று வாக்கெடுப்பு நடத்த விடமாட்டோம்' என கூறி, சபாநாயகர் தனபாலை முற்றுகை இட்டனர். 

மதியம் 12:30 மணி:

  #OPSvsEPS #LIVE (02/18/2017) 
10:06
 
 
Saturday February 18, 2017 10:06 
10:07
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை

கூவத்தூரிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வருகை.
 
 
Saturday February 18, 2017 10:07 
10:13
சட்டசபை வளாகத்துக்குள் நுழைந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் கண்டன முழக்கத்தை எழுப்பினர்.
 
 
Saturday February 18, 2017 10:13 
10:25
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். சத்திய மூர்த்தி பவனில் நடத்த கூட்டத்திற்கு பிறகு இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். வாக்கெடுப்பு தொடர்பான ஈவிகேஸ் இளங்கோவனின் தெரிவித்த கருத்தை மறுத்துள்ளார்.
 
 
Saturday February 18, 2017 10:25 
10:28
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையைப் பெறுவாரா?
ஆம்
 
 ( 15% )
இல்லை
 
 ( 85% )
 
 
Saturday February 18, 2017 10:28 
10:35
உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி பேரவை கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்
 
 
Saturday February 18, 2017 10:35 
10:42
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் ஆதரவு எம்எல்ஏக்கள் வருகின்றனர்.
 
 
Saturday February 18, 2017 10:42 
10:42
அதிமுக கொறடாவாக செம்மலையை நியமித்து மதுசூதனன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 
Saturday February 18, 2017 10:42 
10:46
“அவரை என்னாத்துக்கு முதல்வர் ஆக்கினாங்க!?” - எடப்பாடி மக்கள் இப்படிச் சொல்றாங்களே! #VikatanExclusive #TnPolitics… twitter.com/i/web/status/8…
 
Saturday February 18, 2017 10:46 விகடன்
10:46
ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி! எந்த எம்.எல்.ஏ. ஆதரவு யாருக்கு? #MlaMeter #TNAssembly #FloorTest#TnPolitics… twitter.com/i/web/status/8…
 
Saturday February 18, 2017 10:46 விகடன்
10:48
சட்டப்பேரவையில் ஒன்று, இண்டு, மூன்று பிரிவுகளில் அதிமுக எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ளனர். நான்காவது பிரிவில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ளனர்.
 
 
Saturday February 18, 2017 10:48 
10:49
எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்றமுடியவில்லைதமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்
 
Saturday February 18, 2017 10:49 Tamilisai Soundrajan
10:49
எதிர்க்கட்சித்தலவரையும் எம்எல்ஏக்களையும் சோதனை என்ற பெயரில் வாகனங்களை கோட்டைக்குள் அனுமதிக்காமல் இருப்பது என்ன நியாயம்?
 
Saturday February 18, 2017 10:49 Tamilisai Soundrajan
10:50
 
 
Saturday February 18, 2017 10:50 
10:53
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளனர்!
 
 
Saturday February 18, 2017 10:53 
10:56
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு வந்தடைந்தார்.
 
 
Saturday February 18, 2017 10:56 
11:02
தலைமைச் செயலகத்தில் பத்திரிகை புகைப்படக்காரர்களை சட்டப்பேரவை வளாகத்துக்குள் அனுமதிக்க காவல்துறையின் மறுத்துவருகின்றனர். இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
Saturday February 18, 2017 11:02 
11:03
சட்டப்பேரவைக்கு சபாநாயகர் தனபால் வந்துள்ளார். தனது இருக்கையில் அவர் அமர்ந்துள்ளார்.
 
 
Saturday February 18, 2017 11:03 
11:03
சபாநாயகர் தலைமையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கியுள்ளது.
 
 
Saturday February 18, 2017 11:03 
11:06
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கூறி அவர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
Saturday February 18, 2017 11:06 
11:07
செம்மலை பேச வேண்டும் என்று கூறி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமளியில் ஈடுபட்டு வருகிறார்.
 
 
Saturday February 18, 2017 11:07 
11:07
சட்டப்பேரவையின் 5,6 ஆவது பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ளனர்.
 
 
Saturday February 18, 2017 11:07 
11:08
நம்பிக்கை வாக்கு கோரி தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
 
 
Saturday February 18, 2017 11:08 
11:12
சிறைக் கைதிகளைப் போல எம்.எல்.ஏ.க்கள் நடத்தப்படுகிறார்கள். மு.க.ஸ்டாலின் கொதிப்பு.
 
 
Saturday February 18, 2017 11:12 
11:12
ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம். ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம்.
 
 
Saturday February 18, 2017 11:12 
11:17
ஓபிஎஸ் நுழைந்ததுமே திமுக வரவேற்பு. "அண்ணன் தன்மானச்சிங்கம் ஓ.பி.எஸ். வாழ்க" திமுக கோஷம்
 
 
Saturday February 18, 2017 11:17 
11:19
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால் சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டது.
 
 
Saturday February 18, 2017 11:19 
11:19
உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் அமைதி காக்கும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 
Saturday February 18, 2017 11:19 
11:21
சட்டப்பேரவையில் எழுந்து நின்று வாக்களிக்கும் முறையில் வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
 
 
Saturday February 18, 2017 11:21 

நீங்க எப்படி பீல் பண்றீங்க