கூவத்தூரில் மாணவர்களை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய சம்பவம்... மக்கள் காட்டம்!

Koovathur children

அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததையடுத்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருக்கும் கோல்டன்-பே ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வாயலூர் தனியார் சிறுவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கூவத்தூர் அழைத்து வந்து, எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற தட்டிகளை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறார் தனியார் விடுதியின் நிர்வாகி.

இன்னும் ஒருசில தினங்களில் பொதுத்தேர்வைச் சந்திக்க இருக்கும் +2 மாணவர்களை சுய லாபத்துக்குப் பயன்படுத்தும் இவர்களை இங்கிருக்கும் காவல்துறையினரும் மக்களும் கண்டித்துள்ளனர். 

ஜெ.முருகன், ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!