வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (18/02/2017)

கடைசி தொடர்பு:15:57 (18/02/2017)

அ.தி.மு.க கொறடா செம்மலை! மதுசூதனன் அடுத்த அதிரடி

அ.தி.மு.க கொறடாவாக செம்மலையை நியமித்து மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

இதையடுத்து, அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், நாளை அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிக்காதபட்சத்தில் அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க கொறடாவாக செம்மலையை நியமித்து மதுசூதனன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க