'தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்'- தமிழிசை

Tamilisai Soundrajan

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், பாஜக-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில், 'தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.

அவர் மேலும், 'எதிர்க்கட்சித் தலைவரையும் எம்.எல்.ஏ.க்களையும் சோதனை என்ற பெயரில்  கோட்டைக்குள் அனுமதிக்காமல் இருப்பது என்ன நியாயம். எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை, எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என்று தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!