வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (18/02/2017)

கடைசி தொடர்பு:15:56 (18/02/2017)

சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க, பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் அமளி!

சட்டப்பேரவையில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, தி.மு.க, பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முழக்கமிட்டனர்.

மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்த அமளிக்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளி நிலவி வருகிறது.

இந்நிலையில், மதுசூதனனால் கொறடாவாக நியமிக்கப்பட்ட செம்மலையைப்  பேச விட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் சிறைக் கைதிகள் போல அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க