வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (18/02/2017)

கடைசி தொடர்பு:15:56 (18/02/2017)

சட்டப்பேரவையில் தி.மு.க-வினர் கடும் அமளி... மீண்டும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது!

Secretriat

காலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காகக் கூடிய சட்டப்பேரவை, எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, சபாநாயகர் தனபாலை தி.மு.க-வினர் முற்றுகையிட்டனர். அவரது இருக்கை மற்றும் மைக்  தி.மு.க-வினரால் உடைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை சற்று நேரத்துக்கு முன்பு மீண்டும் கூடியது.

அப்போது பேசிய சபாநாயகர் தனபால், 'அவையில் எனக்கு நடந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. அவை விதிகளின்படி அவையை நடத்த  கடமைப்பட்டுள்ளேன்.' என்று பேசினார். 

இதற்குப் பின்னரும் தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். எனவே, திமுக-வினரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவுப்படி திமுக-வினரை அவையிலிருந்து வெளியேற்ற காவலர்கள் முயன்றனர். காவலர்கள் தி.மு.க-வினரை வெளியேற்றத் திணறியதால், மீண்டும் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க