வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (18/02/2017)

கடைசி தொடர்பு:15:58 (18/02/2017)

ஆளுநரின் மும்பை பயணம் ரத்து!

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில், கடும் அமளி நடைபெற்றது. இதனால், இன்று மட்டும் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரணமான சூழல், இன்று உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் ஏற்கெனவே மும்பை செல்லத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க