தலைகுனிவை ஏற்படுத்திய சட்டசபை நிகழ்வுகள் - ஜி.ராமகிருஷ்ணன் | G.Ramakrishnan condemns TN assembly incidents

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (18/02/2017)

கடைசி தொடர்பு:19:21 (18/02/2017)

தலைகுனிவை ஏற்படுத்திய சட்டசபை நிகழ்வுகள் - ஜி.ராமகிருஷ்ணன்

சட்டசபை நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவவை ஏற்படுத்தி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. 

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை வன்முறையின் மூலமாக செய்துவிட முடியாது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அனைத்துப் பகுதியினரும் ஒத்துழைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது" என்று கூறியுள்ளார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க