வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (18/02/2017)

கடைசி தொடர்பு:22:33 (18/02/2017)

சட்டசபை காவலர்களாக மாறிய காவல்துறை உயர் அதிகாரிகள்!

letter

தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி சபாநாயகரை முற்றுகையிட்டனர். இந்தப் படலத்தின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அவைக் காவலர்களின் வெள்ளைச் சீருடையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், சபையில் நிலவிய அசாதாரண சூழலை கையாள காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரை, அவைக்காவலர் உடையில் பங்கேற்கக்கோரி காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூடுதல் ஆணையர் ஶ்ரீதர், துணை ஆணையர் சுதாகர் உட்பட 9 உயர் அதிகாரிகளின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க