ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி...

Edappadi Palanisamy with Governor

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, கடும் அமளிக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பழனிசாமி வெற்றி பெற்றார். இதனையடுத்து, இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் பழனிசாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்திக்கிறார். நேற்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இன்று ஆளுநரை முதல்வர் சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!