ஆளுநருடன் தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு!

trichy siva

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை, ராஜ் பவனில் சந்தித்தனர். அப்போது, நேற்று சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா எம்.பி, 'எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது முறைகேடான ஒன்று. சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்.

பேரவையில் நடந்த இந்த வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளோம். நேற்று காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அவைக்காவலர்கள் உடையில் உள்ளே இருந்தது பற்றியும் எடுத்துரைத்துள்ளோம். அவரும் பரிசீலிக்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்' என்றார்.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, ராஜ் பவனில் சந்திக்க இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் மைத்ரேயன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் செல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!