வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (19/02/2017)

கடைசி தொடர்பு:12:40 (19/02/2017)

பேரவையில் நடந்த சம்பவங்களை கண்டித்து வரும் 22-ம் தேதி தி.மு.க உண்ணாவிரதம்...!

மு.க.ஸ்டாலின்

இன்று காலை தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வினர் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, நேற்று சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வரும் 22-ம் தேதி தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மு.க.ஸ்டாலின், 'பேரவையில் நடந்த சம்பவங்களை கண்டித்து வரும் 22-ம் தேதி தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத் தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க