வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (20/02/2017)

கடைசி தொடர்பு:10:14 (21/02/2017)

சட்டப்பேரவை நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில்  நடந்த நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கையை ஆளுநர் மாளிகையில் நேரில் வழங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முறையீட்டை தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

Assembly factual report, Stalin at TN Assembly
 

இன்று காலை  சபாநாயகர் தனபால், சட்டப்பேரவைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரித்தார். சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடந்த அனைத்து நிகழ்வுகளின் விரிவான அறிக்கையை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஜமாலுதீன் சமர்ப்பித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க