வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (20/02/2017)

கடைசி தொடர்பு:10:08 (21/02/2017)

''உங்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி வேண்டுமா... வேண்டாமா..!?'' - Sign The Petition

சசிகலா - இளவரசி

பெரும்பான்மை பிரதிநிதித்துவம்தான் ஜனநாயகத்தின் உரம்.! ஜனநாயகம் பட்டுப்போய்விடாமல் இருக்கவேண்டுமென்றால், பெரும்பான்மை மக்களின் கருத்துகள் மதிக்கப்படவேண்டும். அவர்களின் சொல்லுக்கு செவிசாய்க்க வேண்டும். தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த அரசை விரும்புகிறார்களா? என்று தெரியவில்லை. 

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் விரல் அசைவில் இந்த மாநிலம் இயங்கவேண்டும் என தமிழக மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆள்வதற்காக 135 தொகுதிகளை வாரிக் கொடுக்கவில்லை என்பது சொக்கனுக்கும் தெரிந்த உண்மை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு விழுந்த ஒன்றரை கோடி சொச்சம் வாக்குகள் அனைத்தும்  ஜெயலலிதாவுக்காக விழுந்தவை. பெற்ற வாக்குகள் எல்லாம் ஜெயலலிதாவை முன்னிறுத்திப் பெற்றவை. அவருக்காக அளிக்கப்பட்டவை. இப்போது ஜெயலலிதா இல்லை.  ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த சசிகலாவும் பரப்பன அக்ரஹாரத்தில் மெழுகுவத்தி செய்துகொண்டிருக்கிறார். கட்சி தினகரனின் கட்டுப்பாட்டுக்கு சென்றிருக்கிறது.  இதை, 'தமிழக மக்கள் என்பதைத்தாண்டி பெரும்பான்மை அ.தி.மு.க-வினரே விரும்பவில்லை.' என்பது கண்கூடு. 

 சரி... இப்போது என்ன செய்யலாம்...? 'நடப்பது நடக்கட்டும் எல்லாம் நம் தலைவிதி' என்று ஒதுங்கிச் செல்லலாமா... அல்லது அநீதி நிகழ்கிறது என்று உரக்க கத்தலாமா...? எல்லாவற்றுக்கும் ஒதுங்கியே சென்றால், இதன் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளப் போவது நம் பிள்ளைகளும்தான்.  கண்ணுக்கு முன்னால் ஒரு அநீதி நிகழ்கிறது. அதைக் குறைந்தபட்சம் அநீதி என்று சுட்டிக்காட்டுவோம். அதற்கு எதிராக ஓங்கி குரல் எழுப்புவோம். 

சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வேண்டுமானால் இந்த அரசு வென்றிருக்கலாம். ஆனால், 'இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல' என்று நீங்கள் நம்புவீர்களாயின்... மக்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்துவிட்டது என்ற கருத்து உடையவர்களாயின்.... இந்த Petition-ல் கையெழுத்திடுங்கள்.

காந்தி, "Exhibit the Injustice" என்பார். ஆம், ஒரு அநீதி நிகழ்கிறது. அதை உரக்கச் சொல்வோம்!

Sign the Petition!

 

உங்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி வேண்டுமா... வேண்டாமா..!? - Sign The Petition

 

 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்