வெளியிடப்பட்ட நேரம்: 22:53 (20/02/2017)

கடைசி தொடர்பு:22:53 (20/02/2017)

பாலைவனமாக மாறும் தமிழகம் -வைகோ வேதனை

கருவேலை மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 சதவீதம் கூட அகற்றவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகள் மற்றும் விவசாய நிலங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை பகுதியாக இருந்த தமிழகம் இன்று பாலைவனமாக மாறி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அண்டை மாநிலங்களின் அத்து மீறல்கள், சுரண்டப்படும் மணல் கொள்ளை, நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் என பல்வேறு பாதிப்புகளால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாலைவனமாக மாறும் தமிழகத்தை பார்க்கப் பொறுக்க முடியாமல், சீமை கருவேல மரங்களுக்கு எதிராகவே தாம் நீதிமன்றம் சென்றதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், இதுவரை 10 சதவீதம் கருவேல மரங்களே அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். மற்ற மாவட்டங்களை விட, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த 10 சதவீதம் பணிகள்கூட நடைபெறாமல் இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை அழிக்க அரசு மட்டும் நினைத்தால் முடியாது என்றும், அனைத்து மக்களும் இந்தச் சீமை கருவேல மரத்திற்கு எதிரான போரில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். 

- மோகன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க