புதிய முதல்வரின் டார்கெட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள்!

ஆட்சி மாற்றம் நடைபெற்றாலே, அதன் தொடர்ச்சியாக முதலில் கைவைப்பது ஐஏஎஸ்.மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீதுதான். அதற்கு, எடப்பாடி அரசு மட்டும் விதிவிலக்கு இல்லை என்று தெரிகிறது. 

  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை திடீர் திடீர் என மாற்றப்படுவார்கள். முதல்வராக ஓ.பி.எஸ் இருந்தபோது, பெரிய அளவில் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் இல்லை. ஆனால், அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு, ஆட்சியை மீ்ண்டும் பிடிப்பதே கடினமானது. ஆட்சியை சிக்கலில் இருந்து மீட்டதும், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்  தினகரனுடன் கார்டனில் முதல் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அப்போது, அவர்களுக்கு  சாதகமான ஐஏஎஸ் மற்றும்  ஐபிஎஸ் அதிகாரிகள் லிஸ்ட் தயார்செய்யப்படுகிறது. குறிப்பாக, கூவத்துாரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் தங்களுக்குச் சாதமாக நடந்துகொள்ளவில்லை என்ற கோபம் ஆளும் தரப்பிடம் இருக்கிறது. எனவே, முக்கிய இலாக்காவில் இனி, நமக்கு வேண்டியவர்கள் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து பட்டியல் தயார்செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மேல்மட்டம் முதல் மாவட்டம் வரை அதிகாரிகள் பந்தாடப்படலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!