வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (21/02/2017)

கடைசி தொடர்பு:12:43 (21/02/2017)

தமிழக மீனவர்கள் பத்துப் பேரின் காவல், இரண்டாவது முறை நீட்டிப்பு!

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் பத்துப் பேரின் காவல், இரண்டாவது முறை நீட்டித்துள்ளது ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள், கடந்த ஏழாம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் பத்துப் பேர்  ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.  மார்ச் ஏழாம் தேதி வரை அவர்களின் காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க