எதிர்ப்புகளை மீறி, கோவை வரும் பிரதமர் மோடி! | PM Narendra Modi to visit Coimbature Isha Yoga Center on Feb.24

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (21/02/2017)

கடைசி தொடர்பு:12:21 (21/02/2017)

எதிர்ப்புகளை மீறி, கோவை வரும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு வருவதாக அறிவித்துள்ளார். கோவை வருவதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார் மோடி. 
 

Isha yoga centre, Modi

கோவையில், காட்டுப் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஈஷா மையம், சட்டவிதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஈஷா ஏற்பாடுசெய்யும் நிகழ்ச்சிக்கு மோடி வரக்கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினர். இந்நிலையில், வரும் 24-ம் தேதி ஈஷா ஏற்பாடுசெய்துள்ள நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க