வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (21/02/2017)

கடைசி தொடர்பு:14:46 (21/02/2017)

எண்ணெய்க் கசிவை அகற்றியவர்களுக்கு உடல்நலக்குறைவு

எண்ணூர் எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்த பணியாளர்கள், மீனவர்கள், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வறிக்கையை மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இன்று வெளியிட்டது. 

Oil spill

மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்தவர்களுக்கு எந்த ஒரு தற்காப்புக் கவசமும் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்ய வந்தவர்களுக்குக் கையுறை, பூட்ஸ் போன்ற எந்தத் தற்காப்புக் கவசமும் வழங்கப்படவில்லை. பொதுவாக எண்ணெய்க் கசிவை ரசாயனப் பேரழிவுப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சென்னைக் கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை சுத்தம் செய்தவர்கள் எந்தவிதப் பயிற்சியும் பெறாதவர்கள். தற்போது  அவர்களில் பலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

விரிவான 14 பக்கங்கள் கொண்ட அறிக்கை www.storyofennore.wordpress.com/resources/reports என்னும் இணைய முகவரியில் உள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க