வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (22/02/2017)

கடைசி தொடர்பு:17:09 (22/02/2017)

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மு.க.ஸ்டாலின் வழக்கு ஒத்திவைப்பு!

High Court of Chennai

கடந்த 18-ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின்போது, எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கோரி, கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அன்று பேரவை  இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பின், தி.மு.க.வினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை, பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க