விரைவில் தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம்!

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Edapadi Palanisamy

கூட்டத்தில், ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க அலுவலர் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவில், நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறையின் முதன்மைச் செயலாளர்,  பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பார்கள். மேலும், இந்தக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தக் குழு, நான்கு மாத காலத்துக்குள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, இன்னும் நான்கு மாதங்களில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதியங்களில் மாற்றம் கொண்டுவரப்படும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!