வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (22/02/2017)

கடைசி தொடர்பு:14:15 (22/02/2017)

சத்யபாமா யுனிவர்சிட்டியில் ஜேப்பியாருக்கு நினைவு மண்டபம்!

Sathyabama University Jeppiaar memorial

சத்யபாமா யுனிவர்சிட்டியில், அதன் நிறுவனர் மறைந்த திரு. ஜேப்பியார் அவர்களுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. 

பொறியியல் கல்லூரியாக ஆரம்பித்து மாறிய சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர். ஜேப்பியாரால் 1987-ல் தொடங்கப்பட்டது. இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற கனவோடு இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர், ஜேப்பியார். மாணவ சமுதாயத்துக்கு நல்ல எதிர்காலம் அமைய, ஒழுக்கம், பெருமை மற்றும் உற்சாகத்துடன்கூடிய கல்வியை வழங்கியவர். “Entry is not Important, Exit is important” என்ற தாரக மந்திரத்துடன் சத்யபாமா பல்கலைக்கழகத்தை வழிநடத்திய ஜேப்பியார்,  2016-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி இயற்கை எய்தினார். மறைந்த ஜேப்பியாரின் நினைவாக, சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்துக்குள்  நினைவிடம் அமைக்க வேண்டும் என்கிற அவருடைய குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றிவைத்திருக்கிறது, சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாகம்.

Sathyabama University

ஆய்வுகளின் மூலமே தரமான கல்வியைப் பெற முடியும் என்கிற ஜேப்பியாரின் கொள்கையைப் பறைசாற்றும் வண்ணம், யுனிவர்சிட்டியின் பிரதான நூலகத்தையும், சர்வதேச ஆய்வுக்கூடத்தையும் ஒட்டியே இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஜேப்பியாருக்குப் பிடித்த எண்ணான ஆறாம் எண்ணைக் குறிக்கும் வகையில் 33 அடி உயரம், 51 தூண்கள், 6 வாயில்களுடன் இந்த நினைவுமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க