திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Swine flu at Trichy

கடந்த சில வாரங்களாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பலியாகிக் கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்த சிறுவன் ஜீவானந்தம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில், நோயாளிகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதால் பலர் இறந்துபோகும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 

சி.ய.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!