வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (22/02/2017)

கடைசி தொடர்பு:16:18 (22/02/2017)

தருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

madras university tharun vijay

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் மதச்சாயம் பூச நினைப்பதாக கூறிய அவர்கள், தருண் விஜயை உடனே வெளியேறுமாறு கோஷமிட்டனர்.

madras university students

madras university students 3

அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டதால், தருண் விஜய் வேறு வழியாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் காவல்துறை விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறியது. மாணவர்கள் தொடர் கோஷமிட்டதால் பல்கலை வளாகத்துக்குள்ளேயே மாணவர்களை கைது செய்தது காவல்துறை.

படங்கள்: ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க