வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (22/02/2017)

கடைசி தொடர்பு:18:34 (22/02/2017)

தமிழக அரசு மீது சுற்றுச் சூழல் அமைச்சகம் புகார்

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக கஸ்தூரிரங்கன் குழு 2013-ம் ஆண்டு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பாக கஸ்தூரிரங்கன் குழு 2013-ம் ஆண்டு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் மீது தமிழகத்தைத் தவிர மீதமுள்ள ஐந்து மாநிலங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. அந்த அறிக்கையில், 20,000 சதுர கி.மீ பரப்புக்கு மேல் கட்டுமானம் கூடாது என்றும் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் குடியிருப்புகள் கூடாது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, வன விலங்குகள் மற்றும் காடுகளை பாதுகாக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையின் மீது தமிழ்நாடு அரசு கருத்து ஏதும் தெரிவிக்காததால், அதனை செயல்படுத்த முடியவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க