'கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவருக்கு நன்றி!' அதிமுக எம்.எல்.ஏ உருக்கம்

தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவருக்கு ஜெயங்கொண்டம் அதிமுக எம்.எல்.ஏ நன்றி கூறி உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், அதிர்ப்தி அடைந்த ஜெயங்கொண்டம் வாழ் பொதுமக்கள், எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இது தொடர்பாக ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், "நான் இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த நண்பர்களுக்கு நன்றி. அதை வாட்ஸ் அப்,பேஸ் புக்கில் ஷேர் செய்த எனது உயிரிலும் மேலான நண்பர்களுக்கு மிக்க நன்றி.

அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழலில், எனது செயல்பாட்டிற்காக போற்றுபவர்கள் போற்றட்டும், தூற்றுபவர் தூற்றட்டும். அம்மா வளர்த்த கட்சியை உடையாமல் காப்பாற்றியிருக்கிறோம் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. எனது இந்த செயலை, அம்மாவின் கனவை நிறைவேற்றி இருப்பதாகவே என்னை நான் உணர்கிறேன்" என்று உருக்கமாக பேசினார்.

- எம்.திலீபன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!