ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்!

கோவை வனப் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக இரவு நேரங்கள் யானைகள் ஊருக்குள் புகுந்த அட்டகாசம் செய்து வருகின்றன.

கோவையிலுள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நாள்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் அருகே இருக்கும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை வேளையில், கோவை வடவள்ளி அருகே இருக்கும் பொம்மன்பாளையத்தில், காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளன.

ஊருக்குள் யானை புகுந்ததால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவற்றை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரவு நேரம் என்பதால், பொதுமக்களும் வனத்துறையினருடன் இணைந்து யானைகளைக் காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

- செய்தி மற்றும் படங்கள்: தி.விஜய்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!