சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு: களத்தில் இறங்கி ஆய்வு செய்த நீதிபதிகள்!

சிவகங்கை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படுவதை கண்காணிக்கும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் களத்தில் இறங்கி ஆய்வு செய்ததால் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் காடுபோல் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறபித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி பகுதியில் சீமை கருவேல மரங்கள் எந்த அளவுக்கு அழிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், வைத்தியநாதன், கலையரசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், களத்தில் நின்று பணியாற்றிய அதிகாரிகளும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகளின் இந்த திடீர் ஆய்வை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனால், மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அழிப்பதை, மதுரை மாவட்ட ஆட்சியர் தீவிரப்படுத்தி உள்ளார்.

-சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!