வெளியிடப்பட்ட நேரம்: 06:12 (23/02/2017)

கடைசி தொடர்பு:07:48 (23/02/2017)

உத்தரப்பிரதேசத்தில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு, 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. முதல் மூன்று கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில், 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 53 தொகுதிகளில் 4-வது கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் சுமார் 1கோடியே 84 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய உள்ளனர். இதில், பல்வேறு முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் உட்பட 680 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க