டி.டி.வி.தினகரனை ஏற்க மாட்டோம்! அதிரடியைக் கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக்

டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்தும் தெரியவரும். மருத்துவ சிகிச்சைகள் குறித்து பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கடன் வாங்கிக் கட்டுவோம். போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமையாளர்கள் நானும் தீபாவும்தான். தீபா அரசியல் பயணத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.

பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும். அவர் விரும்பினால் அவருக்குத் தலைமைப் பொறுப்பு வழங்குவோம். அ.தி.மு.க எப்போதும் உடையாது. கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்க டி.டி.வி.தினகரனுக்குத் தகுதியில்லை. அ.தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்க மாட்டார்கள். பன்னீர்செல்வம் தலைமையைத் தொண்டர்கள் ஏற்பார்கள். கட்சித் தலைமையை ஏற்க பன்னீர்செல்வத்துக்குத்தான் தகுதி உள்ளது. சசிகலாவை நான் எப்போதுமே ஆதரிப்பேன். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தலைமையை  ஏற்க மாட்டோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!