500 மதுக்கடைகள் நாளை மூடல்!

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள், 169 பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tasmac

அதேபோல், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் குறித்த பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் 105 டாஸ்மாக் கடைகள், 63 பார்கள், கோவையில் 44 டாஸ்மாக் கடைகள், 20 பார்கள், மதுரையில் 99 டாஸ்மாக் கடைகள் 37 பார்கள், சேலத்தில் 133 டாஸ்மாக் கடைகள், 26 பார்கள், திருச்சியில் 119 டாஸ்மாக் கடைகள் மற்றும் 23 பார்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!