குடியரசுத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

stalin

டெல்லி, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன், டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றிருந்தனர். சட்டப்பேரவையில் தி.மு.கவினர் தாக்கப்பட்டது குறித்து பிரணாப்பிடம் முறையிட்டார் ஸ்டாலின்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், 'சட்டசபையில் நாங்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய மனு கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுக்பை நடத்த வேண்டும் என முறையிட்டோம். அதிமுக உள்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடாது. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!