'அம்மு' முதல் ’அப்போலோ’ வரை... ஜெயலலிதாவின் வாழ்க்கை 69 படங்களில்! #ExclusiveAlbum #RarePictures #VikatanExclusive

ஜெயலலிதாவுடன் சோனியா காந்தி

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினம் பிப்ரவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஜெ. தாய் சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்து கலைகள் பல பயின்று, மேடை நாடகம், நடிப்பு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார். அம்முவான ஜெயலலிதா வாழ நினைத்தது ஒரு சாதாரண வாழ்க்கை. ஆனால் எதிர்பாராதவிதமாக தாய் சந்தியாவின் மறைவும், எம்.ஜி.ஆர் உடனான அறிமுகமும், அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், எம்.பி-யாகவும் இருந்த ஜெ., எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் என்று அடுத்தடுத்த அரசியல் உயர்வுகளும் கிடைத்தது. கூடவே முறைகேடாக சொத்துக் குவித்தது தொடர்பாக 33 வழக்குகளும். முறைகேடாக சொத்துக் குவித்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகிய முதல் முதல்வர் ஜெயலலிதா. 2011-ல் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளிக்கும் வரை, இந்த வழக்கிற்காக அவர் தொடர்ந்து நீதிமன்ற வாசல் ஏறியபடிதான் இருந்தார். அவரது விடுதலைக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையேதான் 22 செப்'16-ல் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் நிகழ்ந்தது. சுமார் 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சையின் போது ஏற்பட்ட திடீர் இதய செயலிழப்பு காரணமாக டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். 1990-க்குப் பிறகே தனது பிறந்தநாளன்று பொதுவெளிக்கு வருவதை தவிர்த்திருந்தார் ஜெ. இருப்பினும் அ.தி.மு.க தொண்டர்கள் தொடர்ந்து நூதனமான முறையில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியபடி இருந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க நினைவுகூரும் அவரது முதல் பிறந்தநாள் இது. அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூரும் புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

ஆல்பத்தை காண க்ளிக் செய்க...-ஐஷ்வர்யா

 படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!