வெளியிடப்பட்ட நேரம்: 07:01 (24/05/2012)

கடைசி தொடர்பு:07:12 (24/05/2012)

ஜெ.மட்டும் கூட்டணி ஒப்புதலை பெற்றா விலையை உயர்த்தினார்?:கருணாநிதி

சென்னை: பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்து கட்டண உயர்வு,மின் கட்டண உயர்வு போன்றவைகளையெல்லாம் அறிவித்த போது தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்து பேசி ஒப்புதல் பெற்றா அறிவித்தார்? கேள்வி எழுப்பினார்.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியிடம்,பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?விலையை குறைக்க வலியுறுத்துவீர்களா? என கேட்டபோது,"எங்கள் கட்சியின் சார்பில்,எங்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே இருக்கிறார்கள்.அவர்கள் மூலமாக இந்த விலை உயர்வு பற்றி எங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறுவோம்.பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்போம்"என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு அங்கம் என்ற வகையில் இந்த விலை உயர்வு பற்றி எங்களிடம் கலந்து பேசினார்களா? என்று கேட்கப்படுகிறது.

அரசின் சார்பாக சில முடிவுகளை எடுக்கும்போது,எல்லா பிரச்சினைகளையும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்க இயலாது. உதாரணமாக தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்து கட்டண உயர்வு,மின் கட்டண உயர்வு போன்றவைகளையெல்லாம் அறிவித்த போது தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்து பேசி ஒப்புதல் பெற்றா அறிவித்தார்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் மூன்றாண்டுகாலமாக இருந்ததே தெரியவில்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருப்பது பற்றி கேட்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சி செயல்பட்டது அவர்களுக்கு தெரியாமல் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? என்று கருணாநிதி மேலும் கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்