வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:38 (24/02/2017)

தீபா, இன்று புதுக் கட்சி தொடங்குகிறார்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, அவரது அண்ணன் மகள் தீபா, புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, அவரது அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பெயரில் பல்வேறு ந்த் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனைத்தொடர்ந்து, காலையில் தனது வீட்டின் முன் பகுதியில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேரவை அலுவலகத்தை அவர் திறந்துவைக்கிறார். முக்கியமாக, மாலை 5 மணி அளவில், தனது புதிய கட்சியின் பெயரை அவர் அறிவிக்கிறார். தொடர்ந்து, பேரவையின் கொடியை அறிமுகப்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க