வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (24/02/2017)

கடைசி தொடர்பு:11:36 (24/02/2017)

மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் நிவாரணம்

எண்ணைக் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 15 கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
ஜனவரி 28 ம் தேதி எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், கப்பலில் இருந்த கச்சா முழுவதும் கடலில் கலக்க நேரிட்டது. அந்த எண்ணைக் கழிவை கடலில் இருந்து அகற்றுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு மேல் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கடலில், எண்ணைக் கழிவு கொட்டியதால் மீனவர்களின் வாழ்வாதரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீனவர்கள், நிவாரணம் கோரியிருந்த நிலையில், 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் எர்ணாவூர், நொச்சிக்குப்பத்தில் 75 லட்ச ரூபாய் மதிப்பில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க