வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (24/02/2017)

கடைசி தொடர்பு:11:37 (24/02/2017)

'என் தம்பி தீபக்கை யாரோ இயக்குகிறார்கள்'! தீபா

சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களைப் பற்றிய உண்மைகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்று கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ’என் தம்பி தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த தீபா, ’என் தம்பி தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். ஜெயலலிதா சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை. என் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவேன். இனி வரும் அனைத்து தேர்தலிலும் நான் போட்டியிடுவேன். சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களைப் பற்றிய உண்மைகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும்’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க