போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கைதி, நடுரோட்டில் வெட்டிக் கொலை - நெல்லையில் பயங்கரம் !

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருந்து தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட கைதி சிங்காரத்தை, மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். போலீசாரின் முன்னிலையிலேயே கைதியை வெட்டிக் கொன்ற சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது, பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுபாஷ் பண்ணையார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். கைதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், கேடிசி நகர் அருகே செல்லும்போது மர்ம நபர்கள் காரை வழிமறித்து, போலீஸார் மீது மிளகாய் பொடியை தூவி கைதியை சராமாரியாக வெட்டிக் கொன்றனர்.


இந்தச் சம்பவத்தில் போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல் ஆணையர் திருஞானம் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!