வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (25/02/2017)

கடைசி தொடர்பு:12:27 (25/02/2017)

திருச்சி, திண்டுகல்லில் இன்று ஜல்லிக்கட்டு

திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு கோலகலமாக நடைபெற்று வருகிறது.

Jallikattu
 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும்  300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

திருச்சியில் திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும்  500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் வன்னியன்விடுதி கிராமத்திலும் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க