விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை! -அமைச்சர் துரைக்கண்ணு | Drought relief fund for TN farmers- says Minister Dhuraikkannu

வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (26/02/2017)

கடைசி தொடர்பு:22:51 (25/02/2017)

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை! -அமைச்சர் துரைக்கண்ணு


 

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சிக் காரணமாக, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், பயிர் கருகிய அதிர்ச்சியிலும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி, பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, இன்னும் சில தினங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், அந்தத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க