நள்ளிரவில் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னை புரசைவாக்கத்தில் நள்ளிரவில் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சென்னை புரசைவாக்கம் சட்டக்கல்லூரி விடுதி அருகே, சில மாணவர்கள் குடிபோதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், சட்டக்கல்லூரி விடுதி அருகே சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!