வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (26/02/2017)

கடைசி தொடர்பு:07:45 (26/02/2017)

தமிழக முதல்வர் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாலை டெல்லி செல்கிறார். அதன்படி, நாளை காலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரைச் சந்தித்து பேசுகிறார். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவரையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை சென்னை திரும்புகிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க