வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (26/02/2017)

கடைசி தொடர்பு:09:06 (26/02/2017)

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு: நாராயணசாமிக்கு சல்யூட் சொன்ன கமல்..!

kamal tweet

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமியை பாராட்டியுள்ள அவர், 'ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஒரு தெளிவான நிலைப்பாட்டை தைரியமாக எடுத்த உங்களுக்கு எனது சல்யூட்' என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, 'காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரவில்லை. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை அறவே ஏற்காது. மாநில அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற முடியாது' என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க