வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (26/02/2017)

கடைசி தொடர்பு:09:37 (26/02/2017)

ஊழலுக்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரண்ட பெண்கள்!

womens protest

ஊழலுக்கு எதிராகவும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலுக்கு எதிராகவும் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் எந்த அமைப்பையும் சாராத 300-க்கும் அதிகமாக பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

womens protest

மாற்றத்தை நோக்கிய மகளிர் பயணம் என்ற பெயரில் பல கோரிக்கைகளை வைத்து கடற்கரையில் கூடியுள்ளனர். அதில், 'ஊழலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று, தமிழக மக்களாகிய நாங்கள் ஊழலுக்கு எதிராக போராட இணைந்துள்ளோம். தமிழக அரசின் எல்லா நிலைகளிலும் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட ஊழலை வேரறுக்க நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டிய நேரம் இது' என தெரிவித்துள்ளனர்.

 womens protest

மேலும், 'நேர்மையான ஆட்சி வேண்டும். குற்றவாளிகளின் கைப்பாவையான எம்.எல்.ஏக்கள் பதவி விலக வேண்டும். குற்றவாளிகளின் கைப்பிடியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மை கொண்ட உண்மையான ஊழலற்ற ஆட்சி வேண்டும்' போன்றவற்றை இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக முன் வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க