'சால்வை வேண்டாம்.. புத்தகங்கள் கொடுங்கள்' - ஸ்டாலின்

stalin

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தனது தொண்டர்களுக்கு அவர் கூறுகையில், 'என் பிறந்தநாளுக்கு என்னை பார்க்க வருபவர்கள் சால்வைகளை அணிவிக்காமல், அதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை பரிசாக வழங்கிடுங்கள். எனது இந்த பிறந்தநாளை தொண்டர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், ரத்த தானம் மற்றும் மரம் நடுதல் போன்ற நற்செயல்களை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக வழியில் தி.மு.க என்றும் தனது போராட்டத்தை தொடரும்' என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!