வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (27/02/2017)

கடைசி தொடர்பு:10:58 (27/02/2017)

அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, சில மாதங்களாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவ்வப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

இன்று காலை,பேரறிவாளனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு உயர் ரத்தஅழுத்தம் மற்றும் கண்பார்வைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பேரறிவாளன் சிகிச்சைபெறுவதையொட்டி, வேலூர் அரசு மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க