தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! | Scarce rain expected in TN

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (27/02/2017)

கடைசி தொடர்பு:14:16 (27/02/2017)

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Chennai weather

தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சென்ற ஆண்டு, வட கிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாததால்... தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணம் கோரியது. அதைத் தொடர்ந்து, மத்தியக்குழு தமிழகம் வந்து, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தது. அறிக்கை சமர்பித்த பின்னர் வறட்சி நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க