சசிகலாவை விமர்சித்த போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்! உண்ணாவிரதத்தைத் தொடங்கினார், ஜெ. விசுவாசி

மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான போலீஸ்காரர் வேல்முருகன், சசிகலாவை விமர்சித்ததாகக் கூறி, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்கக்கோரி, கம்பத்தில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

தேனி மாவட்டம், குச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது தீவிர பற்றுள்ளவர். பல்வேறு சாதனைகள் செய்து ஜெயலலிதா கையால் விருதுகளைப் பெற்றவர். ஜெயலலிதாவுக்கு நெருக்கடியான சமயங்களில் எல்லாம் காவலர் உடையில் பல்வேறு போராட்டங்களைத் தனியாக நடத்தியவர்.

தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வருக்காக கோயில் கட்டி, பராமரிப்பு செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார் வேல்முருகன். இந்நிலையில், சசிகலாவை விமர்சித்ததாகக் கூறி, திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்போது, கம்பத்தில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்கக்கோரி, உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

செய்தி, படங்கள்:  வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!