மாணவர்களுக்காக இணையதளம் தொடங்கினார் பன்னீர்செல்வம்!

'அம்மா கல்வியகம்' (www.ammakalviyagam.in) என்னும் இணையதளத் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில், அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில், இணையதளச் சேவையை அவர் தொடங்கிவைத்தார்.

O.Panneerselvam

இணையதளத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரிதும் உதவும். ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் இது. இந்த இணையதளம், பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளுக்குத் தேவையான  பாடக் குறிப்புகளும் இந்த வெப்சைட்டில் இருக்கும்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!