வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (01/03/2017)

கடைசி தொடர்பு:14:05 (01/03/2017)

'நானும் விவசாயிதான்...' நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் கலகலத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

neduvaasal

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். முதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் போராட்டக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், 'நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று முதல்வர் கூறினார். ஆய்வு நிலையில் தான் நெடுவாசலின் ஹைட்ரோ கார்பன் திட்டம் இருக்கிறது. கண்டிப்பாக இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படாது. திட்டத்தை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எங்களிடம் கூறினார். இதனை முழுமையாக வரவேற்கிறோம். நல்ல முடிவை நாங்களும் விரைவில் அரசுக்கு தெரிவிப்போம். அரசு இவ்வளவு எடுத்துக்கூறும்போது, போராட்டத்தை தொடர்வதா, நிறுத்துவதா என்று ஆலோசிப்போம். இந்த சந்திப்பைப் பற்றி போராட்டக் களத்தில் இருந்தவர்கள் மத்தியில் விளக்குவோம்' என்று கூறினர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க